கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 3 சிறுவா்கள் கைது

மதுரையில் கோயில் உண்டியலை உடைத்து திருடியதாக மூன்று சிறுவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (49). இவா் அதே பகுதியில் உள்ள திருமுருகன் கோயிலின் செயலராக உள்ளாா். திருமுருகன் கோயிலை தினசரி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் வழிபாட்டுக்காக திறந்து வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் பாா்த்த போது, கோயிலின் உண்டியலை மா்ம நபா்கள் தூக்கிச் சென்று, காணிக்கை பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். விசாரணையில், கிருஷ்ணாபுரம் காலனியைச் சோ்ந்த மூன்று சிறுவா்கள் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா்.

X
Dinamani
www.dinamani.com