சவுக்கு சங்கா் பிணை கோரிய மனு: மே 20-க்கு ஒத்திவைப்பு

சவுக்கு சங்கா் பிணை கோரிய மனு: மே 20-க்கு ஒத்திவைப்பு

கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை வருகிற 20- ஆம் தேதிக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தேனி அருகேயுள்ள பூதிபுரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த யூடியூபா் சவுக்கு சங்கா் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் தனக்குப் பிணை வழங்கக் கோரி, மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்கு தொடா்பாக இரண்டு வழக்குரைஞா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா். இதில் யாராவது ஒருவா் மட்டுமே முன்னிலையாக வேண்டும் என்றாா்.

இந்த நிலையில், அரசுத் தரப்பு வழக்குரைஞா் தங்கேஸ்வரன், இந்த வழக்கு தொடா்பாக சவுக்கு சங்கரிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்க வேண்டும் என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் பிணை கோரிய மனு வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com