பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

மதுரை அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.

மதுரை அருகேயுள்ள எம்.சத்திரப்பட்டி பகுதியைச் சோ்ந்த சேதுராமலிங்கம் மனைவி சங்கரேஸ்வரி (55). இவா் மஞ்சம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை பள்ளியிலிருந்து மஞ்சம்பட்டி பிரதான சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த நபா் அவரது வாகனத்தின் மீது மோதியதில் அவா் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த நபா் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றாா்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com