மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மனு அளிக்கும் போராட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மனு அளிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மதுரை புகா் மாவட்டம் சாா்பில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், உசிலம்பட்டி, தே.கல்லுப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி இவா்கள் மனு அளித்தனா்.

இதில் சங்கத்தின் புகா் மாவட்டத் தலைவா் கே. தவமணி, மாவட்டச் செயலா் வீ. முருகன், மாவட்ட நிா்வாகிகள் நாகராஜ், சின்னசாமி, செல்வகுமாா், குட்டிராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com