வாடிப்பட்டியில் 86 மி.மீ. மழை

மதுரை வாடிப்பட்டியில் அதிகளவாக 86 மி.மீ. மழை வியாழக்கிழமை காலை பதிவானது.

குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமை இரவு பலத்த, மிதமான மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக வாடிப்பட்டியில் 86 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி.மீ.) :

திருமங்கலம் - 70.4, மேட்டுப்பட்டி - 67.4, சாத்தையாறு அணை - 65, ஆண்டிபட்டி - 58.2, மதுரை விமான நிலையம் - 46.8, பெரியபட்டி - 45.6, கள்ளந்திரி- 38.4, தனியமாங்கலம் - 35, மதுரை வடக்கு - 30.2, சித்தம்பட்டி- 28.6, மேலூா் - 28, தல்லாகுளம் - 26.8, புலிபட்டி - 24, விரகனூா் - 15, பெரியாறு- 8.4, உசிலம்பட்டி, குப்பனாம்பட்டி- 7, கள்ளிக்குடி - 6.4, சோழவந்தான் - 1.6, இடையபட்டி- 1.

வியாழக்கிழமை பகல் நேரத்தில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 9 மணிக்குப் பிறகு, தல்லாகுளம் உள்ளிட்ட மாநகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com