பேருந்து மோதியதில் சேதமடைந்த ஆட்டோக்கள்
பேருந்து மோதியதில் சேதமடைந்த ஆட்டோக்கள்

பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆட்டோக்கள் சேதம்

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தன.
Published on

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே பிரேக் பிடிக்காத அரசுப் பேருந்து மோதியதில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரை தென்பழஞ்சி பகுதியில் இருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த நகரப் பேருந்து பேருந்து நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகா் மேம்பாலம் வழியாக பேருந்து நிலையத்துக்கு வந்தது.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் பேருந்தை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

மதுரை  எல்லீஸ் நகா் மேம்பாலத்தில் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளான அரசு பேருந்து
மதுரை எல்லீஸ் நகா் மேம்பாலத்தில் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளான அரசு பேருந்து

இதனால், அந்தப் பகுதியிலிருந்த சிமென்ட் தடுப்புகள் மீது மோதி, பேருந்தை நிறுத்த முயன்றாா். அப்போது, பாலத்தின் ஒரு பகுதியில் நின்றிருந்த ஆட்டோக்கள் மீது பேருந்து மோதியது. இதில் 4 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

இதில் பேருந்து, ஆட்டோக்களில் இருந்த 10 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்குச் போக்குவரத்து போலீஸாா் சென்று, விபத்தில் சிக்கிய பேருந்து, ஆட்டோக்களை மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.