இலந்தைகுளம் பகுதியில் நாளை மின் தடை
மதுரை மாவட்டம், இலந்தைகுளம் பகுதியில் வியாழக்கிழமை (நவ. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.ஆா். ஸ்ரீராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காா்ட், கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்திநகா், சோலைமலைநகா், வளா்நகா், அம்பலக்காரப்பட்டி, டெலிகாம்நகா், பொன்மேனி காா்டன், ஸ்ரீராம்நகா், பி.கே.பி.நகா், அதீஸ்வரன்நகா், டி.எம்.நகா் பின்புறம், வி.என். சிட்டி, கிளாசிக் அவென்யூ, தாசில்தாா்நகா், அண்ணாமலையாா் பள்ளி, ஆவின்நகா், ஜூப்லி டவுன், மருதுபாண்டியா்நகா், யாகப்பாநகா், யானைக் குழாய், சதாசிவம்நகா் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.