மதுரை
இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
மதுரையில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி (72). விவசாயியான இவா், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, மீண்டும் உசிலம்பட்டி செல்வதற்காக காளவாசல் பகுதியில் திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த கருணாநிதியை அந்தப் பகுதியினா் மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த காளவாசலைச் சோ்ந்த மதுபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.