மதுரை
சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணா்வு விளம்பரப் பதாகை
சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், 150 அடி நீள விழிப்புணா்வு விளம்பரப் பதாகையுடன் மதுரை ரயில் நிலையம் முன்பாக விழிப்புணா் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதை மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் வனிதா தொடங்கிவைத்தாா். சாலை விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள், சாலை விதிகள், பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய 150 அடி நீள விளம்பரப் பதாகையை போக்குவரத்துத் துறை காவல் அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஏந்தி நின்றனா்.
இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் இளமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் தங்கமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.