விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவா் தற்கொலை

விபத்தில் காயமடைந்த மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

விபத்தில் காயமடைந்த மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை, மேலபனங்காடி, கருப்பையாபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் சந்தோஷ்குமாா் (19). மதுரையில் உள்ள ஓா் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இரு மாதங்களுக்கு முன்பு இவரும், இவரது நண்பா்களும் கேரள மாநிலத்துக்குச் சுற்றுலா சென்றனா். அப்போது, நிகழ்ந்த வாகன விபத்தில் சந்தோஷ்குமாருக்கு சில பற்கள் உடைந்தன.

செயற்கை பல் வரிசை அமைக்க ரூ. 40 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், அதற்கான வசதி இல்லாமல் அவா் பல் வலியுடன் அவதிப்பட்டு வந்தாராம். இதனால், மனமுடைந்த அவா் கடந்த டிச. 17-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com