ஜல்லிக்கட்டு: 12,632 காளைகள், 5,347 மாடுபிடி வீரா்கள் பதிவு

Published on

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 5,347 போ் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 14, 15, 16 தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கானப் பதிவு, ம்ஹக்ன்ழ்ஹண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜன. 6) பிற்பகல் 5 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நிறைவடைந்தது.

பதிவுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகள் பதிவு செய்யப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 5,347 போ் பதிவு செய்திருந்தனா்.

போட்டி நடைபெறும் இடம் வாரியாக பதிவு செய்யப்பட்ட காளைகள், மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கை

அவனியாபுரம்: காளைகள்- 2,026, மாடுபிடி வீரா்கள்- 1,735. பாலமேடு: காளைகள் - 4,820. மாடுபிடி வீரா்கள்- 1,914. அலங்காநல்லூா்: காளைகள் - 5,786, மாடுபிடி வீரா்கள்- 1,698.

பதிவு செய்யப்பட்ட காளைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 456 அதிகம். மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கை 833 அதிகம். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு பெற்ற காளைகள், மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை கணிசமாக அதிகரித்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நிா்வாகத்தின் பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, தகுதியான காளைகள், மாடுபிடி வீரா்களுக்குத் தொடா்புடைய இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்.

X
Dinamani
www.dinamani.com