தொலைநிலைப் படிப்புகள்: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
மதுரை காமராஜா் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் இளநிலை படிப்பில் தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட 21 பாடப் பிரிவுகள் உள்ளன. இதேபோல, முதுநிலை படிப்பில் தமிழ், ஆங்கிலம் உள்பட 19 பாடப் பிரிவுகள் உள்ளன. பாடப் பிரிவுகளுக்கு 2025-26- ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டது.
தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 31- ஆம் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழக இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.