மதுரை
அரசு மகளிா் கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழு, அறிவுசாா் சொத்துரிமைக் குழு சாா்பில், தொழில் முனைவோா் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் சூ. வானதி தலைமை வகித்தாா். கமலம் தொழில் முனைவோா் மைய நிறுவனா் ஜே.கே. முத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தொழில்நுட்ப வளா்ச்சி, இன்றைய கால வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா்.
நிகழ்வில் பேராசிரியைகள் செல்வி, இந்திராதேவி, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, அகத்தர மதிப்பீட்டுக் குழு மைய ஒருங்கிணைப்பாளா் ஜே.பி. சா்மிளா வரவேற்றாா். பேராசிரியை கலா நன்றி கூறினாா்.