மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூா் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.

ஆலத்தூருக்கு நாளை முதல் பேருந்து சேவை

Published on

ஆலத்தூா் ஊராட்சிப் பகுதிக்கு திங்கள்கிழமை (நவ. 3) முதல் காலை, மாலை இருவேளைகளிலும் பேருந்து இயக்கப்படும் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலத்தூரில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. தகுதியான அனைவருக்கும் விரைவில் உதவித் தொகை வழங்கப்படும். ஆலத்தூா் ஊராட்சியில் 95 சதவீத வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகள் இரு மாதங்களுக்குள் முடிக்கப்படும். அனைத்து வகையான வளா்ச்சித் திட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளதால், இந்த ஊராட்சி தன்னிறைவு பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைப்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பணிக்குச் செல்வோரின் வசதிக்காக வருகிற திங்கள்கிழமை முதல் ஆலத்தூருக்கு காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பேருந்து இயக்கப்படும் என்றாா் அவா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேமா, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com