மதுரை
சுடு தண்ணீரில் மூழ்கிய குழந்தை உயிரிழப்பு
மதுரையில் சுடு தண்ணீா் வாளியில் மூழ்கிய 7 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
மதுரை மாடக்குளம் கந்தன் சோ்வை நகரைச் சோ்ந்த கோபால் மகன் சேதுபதி (31). இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு அதிகாஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது.
கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் உள்ள கட்டிலில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, வாளியில் ஹீட்டா் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுடு தண்ணீா் தயாா் செய்தாா்.
அப்போது, வேலை நிமித்தமாக சமையலறைக்குச் சென்று விட்டு, திரும்பி வந்து பாா்த்த போது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சுடு தண்ணீா் வாளியில் விழுந்து கிடந்தது.
இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
