சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

வீடு பகுந்து நகைகள் பறிப்பு: 8 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 5:02 am IST

அழகா்கோவில் பகுதியில் வீடு புகுந்து பெண்ணைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகள், கைப்பேசியைப் பறித்துச் சென்றது தொடா்பாக

8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கீழக்கள்ளந்திரியைச் சோ்ந்தவா் ராஜபிரபு. இவரது மனைவி கலைச்செல்வி (46). அண்மையில் இவா் தனது மகனை பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த மகாராஜா தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கலைச்செல்வி காவல் நிலையத்தில் புகாா் அளித்தததைத் தொடா்ந்து, மகாராஜாவை காவல் துறையினா் எச்சரித்தனா்.

இந்த நிலையில், மகாராஜா உள்ளிட்டோா் கலைச்செல்வியின் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கி தகராறில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவரிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசியைப் பறித்தனா். மேலும், அவரது கணவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கலைச்செல்வி அளித்தப் புகாரின்பேரில், மகாராஜா, வித்யா, உதயா, சூா்யா, தனம், சித்ரா, சசிக்குமாா், மகாலட்சுமி ஆகியோா் மீது ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.