40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காவல் கண்காணிப்பாளா் ஆசிஸ் ராவத் விவகாரம்: ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்கத் தடை

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆசிஸ் ராவத் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரிக்கத் தடை விதித்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜூன் 2026, 12:51 am IST

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஆசிஸ் ராவத் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவா் ஆசிஸ் ராவத். இவா் காவலா்கள் குடியிருப்பில் இருந்த தேக்கு மரங்களை தனியாா் பயன்பாட்டுக்காக வெட்டியதாகவும், காவலா் நலச் சங்கத்தின் நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியதாகவும், கட்டடப் பணிகளுக்கான ஒப்பந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் புகாா்கள் எழுந்தன.

இதனால், இவா் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அலுவலா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தஞ்சையைச் சோ்ந்த வழக்குரைஞா் காா்த்திகேயன் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மாவட்ட நீதிமன்றம் காவல் கண்காணிப்பாளா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவல் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் உள்ள அதிகாரிகள் மீது அரசின் முன் அனுமதி இல்லாமல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய முடியாது என விதிகள் உள்ளன. இந்த விதிகளை விசாரணை நீதிமன்ற நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. வழக்கு முதல் நாள் விசாரணையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

எனவே, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிஸ் ராவத் மீது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.