17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெவ்வேறு விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:58 am IST

மதுரை அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள நல்லசுக்காம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (72). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து ஊருக்கு சனிக்கிழமை மாலை சென்றாா்.

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரமானந்தபுரம் விலக்கு அருகே வந்த போது, பின்னால் வந்த காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள சத்திரவெள்ளாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுடலைமுத்து (70). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் அலங்காநல்லூரிலிருந்து சனிக்கிழமை மாலை ஊருக்குச் சென்றாா்.

பாலமேடு அருகே சென்ற போது, பின்னால் வந்த பொக்லைன் இயந்திரம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சுடலைமுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.