மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:38 am IST

மதுரையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (21). இவா் தனது இரு சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனக் காப்பக வாசலில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன், கபில்தேவ், அலெக்ஸ்குமாா் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்ருக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.