Enable Javscript for better performance
குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் செம்பட்டி அருகே விஷம் குடித்து தாய்-மகன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் செம்பட்டி அருகே விஷம் குடித்து தாய்-மகன் சாவு

    By dn  |   Published on : 28th September 2012 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம், செப். 27: செம்பட்டி அருகே குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் மனம் வெறுத்து, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய்-மகன் உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
     திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (36). இவர், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, குப்பம்மாள் (32) என்ற மனைவியும், அர்ச்சனா (12) என்ற மகளும், பாலமுருகன் (6) என்ற ஊனமுற்ற மகனும் உள்ளனர்.
     இந்த நிலையில், குமரேசன் குறைவான சம்பளமே பெற்று வந்தாராம். இதனால், குடும்பம் நடத்த முடியாமலும், மேலும் ஊனமுற்ற மகனின் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்கியதால், குடும்பம் நடத்த கஷ்டப்பட்டும் வந்துள்ளனர்.
     இதனால் மனம் வெறுத்த குப்பம்மாள், சித்தையன்கோட்டையில் உள்ள தனது தந்தை சுப்பிரமணி வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். அங்கு, குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு கொடுத்துவிட்டு, தானும் குடித்துவிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார்.
     அப்போது இவர்களை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகனும், குப்பம்மாளும் இறந்துவிட்டனர். அர்ச்சனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     இது குறித்து, குமரேசன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai