Enable Javscript for better performance
திண்டுக்கல் கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகம் முற்றுகை

    By dn  |   Published on : 28th September 2012 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல், செப். 27: திண்டுக்கல் கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தை, சிஐடியு போக்குவரத்துத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
     தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் மகாசபைக் கூட்டத் தீர்மானங்களை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சிஐடியூ சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
     இதில், சிஐடியு போக்குவரத்துப் பணியாளர் சம்மேளன துணைப் பொதுச் செயலர் கே. ஆறுமுக நயினார் தலைமை வகித்தார். கோட்டப் பொதுச் செயலர் ஆர். பால்ராஜ், பொருளாளர் மாணிக்கம், மத்திய சங்க நிர்வாகிகள் அதிவீரராம பாண்டியன், முருகானந்தம், கணேசன், தனசாமி, வெங்கிடுசாமி, ராஜாராம், தங்கமணி, சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai