Enable Javscript for better performance
பழனி அருகே விபத்து: பஸ் நடத்துநர் பலி- Dinamani

சுடச்சுட

    

    பழனி, செப். 27: பழனி அருகே தனியார் பஸ் நடத்துநர், அதே பஸ்ஸில் சிக்கி உயிரிழந்தார்.
     திருப்பூரில் இருந்து தனியார் பஸ் பழனி நோக்கி வியாழக்கிழமை காலை வந்தது. இந்த பஸ்ஸின் டிரைவர் செல்வகுமரன் (35). பழனி பாளையம் பகுதியைச் சேர்ந்த ராசுப்பிள்ளை மகன் செல்லதுரை (45) என்பவர் நடத்துநராக இருந்து வந்தார்.
     பழனியை அடுத்த பாறைப்பட்டி பிரிவு அருகே பஸ் வந்தபோது, மொபட் ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால், விபத்தைத் தவிர்க்கும்பொருட்டு, டிரைவர் திடீரென பிரேக் பிடித்து, இடதுபுறமாகச் சென்று பின் வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். அப்போது, முன்பக்க படிக்கட்டு அருகே நின்றிருந்த நடத்துநர் செல்லதுரை சாலையில் விழுந்ததை அடுத்து, அவர் மீது பஸ்ஸின் பின்பக்க சக்கரம் ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து, கீரனூர் போலீஸôர் பஸ்ûஸ ஓட்டிவந்த செல்வகுமரன் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
     பெண்ணை திருமணம் செய்வதாக
     ஏமாற்றியவர் கைது
     பழனி, செப். 27: பழனி அருகே பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸôர் கைது செய்தனர்.
     பழனி அருகே அ.கலையம்புத்தூர் அழகாபுரி 4-வது வார்டை சேர்ந்தவர் மருகன் மகள் போதுமணி (21). இவருக்கும், அ.கலையம்புத்தூர் 3-வது வார்டை சேர்ந்த அம்மாபட்டியான் (23) என்பவருக்கும், கடந்த சில காலமாக பழக்கம் இருந்து வந்துள்ளது.
     இந்நிலையில், போதுமணியை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய அம்மாபட்டியான், கடைசியில் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால், அவரை வற்புறுத்திய போதுமணிக்கு கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.
     இது குறித்து, பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போதுமணி கொடுத்த புகாரின்பேரில், அம்மாபட்டியானை போலீஸôர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai