Enable Javscript for better performance
வரதட்சிணைக் கொடுமை:கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி, செப். 27: பழனி அருகே சின்னக்காந்திபுரம் ஜவஹர் காலனியை சேர்ந்தவர் கருப்புச்சாமி மகன் நாகராஜ் (35). இவருக்கும், வெள்ளையம்மாள் என்பவருக்கும் கடந்த 1997 ஆண்டு ஜூலை 5-ம் தேதி நடைபெற்றது. இவர்களுக்கு, தற்போது 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர்.
     திருமணத்தின்போது, எட்டரை பவுன் நகை, 20 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வரதட்சிணையாகத் தரப்பட்டுள்ளன. இருப்பினும், நாகராஜ் தொழில் துவங்க ஐம்பதாயிரம் வாங்கி வருமாறு வெள்ளையம்மாளை கொடுமை செய்துள்ளார். தராவிட்டால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.
     இதைத் தொடர்ந்து, வெள்ளையம்மாள் (31) பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, நாகராஜை கைது செய்த போலீஸôர், அவரது தந்தை கருப்புச்சாமி (60) மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai