Enable Javscript for better performance
இதய நோய் கண்டறிதல் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம், செப். 29: ஒட்டன்சத்திரத்தில் பொது மருத்துவம் மற்றும் இதய நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
     மதுரை வடமலையான் மருத்துவமனை, திண்டுக்கல் வீனஸ்  எலக்ட்ரானிக்ஸ், ஒட்டன்சத்திரம் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து சனிக்கிழமை இம்முகாமை நடத்தின.
     முகாமில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாபு தலைமையில், மருத்துவர்கள் சல்மேஷ்கான்,ராமநாதன்,பிரியா,ராஜேஸ்வரி ஆகியோர் கொண்ட  குழுவினர் பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
     ஏற்பாடுகளை வடமலையான் மருத்துவமனை மேலாளர்  ஜி.காமேஸ்வரன்,ஹெல்த்கேர் மேலாளர் சைலஜா வினோத் மற்றும் ரோட்டரி சங்கத்  தலைவர் ஜெயக்குமார், செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் ஆகியோர் செய்திருந்தனர்.  310-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai