கடைகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம்
By dn | Published on : 30th September 2012 10:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வத்தலகுண்டு, செப். 29: வத்தலகுண்டு வர்த்தக சங்கக் கூட்டம், அதன் தலைவர்
முருகேசன் தலைமையில் நடைபெற்றது. செயலர் பாலசாயி குமார் முன்னிலை
வகித்தார்.
இதில் சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை
கண்டித்து, கடைகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்துவது எனத்
தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி வெள்ளிக்கிழமை வத்தலகுண்டில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்புக் கொடி கட்டிப் போராட்டம் நடைபெற்றது.