Enable Javscript for better performance
கொடைக்கானலில் மக்கள் தொடர்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல், செப். 29: கொடைக்கானல் ஊராட்சிப் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது.
     கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வில்பட்டி ஊராட்சிப் பகுதியில் மக்கள்  தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆர்.டி.ஓ. ரவிக்குமார் தலைமை வகித்தார்.  வட்டாட்சியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் தலைமை நில அளவையர் தவமணி வரவேற்றார். கொடைக்கானல் குடிமைப் பொருள் வட்டாட்சியர்  மோகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
     முகாமில் வில்பட்டி ஊராட்சிப் பகுதிகளான அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, புலியூர்,  கோம்பை, கோவில்பட்டி, வில்பட்டி ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு எம்.எல்.ஏ. வேணுகோபாலு ரூ. 91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
     இதில், 44 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 71 பேருக்கு முதியோர் உதவித் தொகை, அட்டுவம்பட்டி பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவருக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
       ஊராட்சிமன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் பொன்னுத்துரை, வி.ஏ.ஓ. ஞானவடிவேல், மண்டலத் துணை வட்டாட்சியர்  ஜெயராஜ், வருவாய் ஆய்வாளர் சங்கர், வில்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர்  மலைச்சாமி, துணைத் தலைவர் காமராஜ், திட்டக்குழு உறுப்பினர் சந்திரமோகன்,அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து  கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai