Enable Javscript for better performance
திமுக இளைஞரணி பயிற்சிக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல், செப். 29: திண்டுக்கல் ஒன்றியம், சிறுமலை மலைப்பகுதியில் சனிக்கிழமை மாவட்ட திமுக இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது.
     இதனைத் தொடக்கிவைத்து அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசியது:
     திராவிடர் இயக்க வரலாறு, தமிழ் இயக்க வரலாற்றை புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக இளைஞரணியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
      திமுக இயக்கத்தில் முதலிடத்தில் உள்ளது இளைஞரணி அமைப்பே.  இளைஞரணி மேலும் வலுப்பெற்று இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார் அவர்.
     பயிற்சி பட்டறையில் திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் திருச்சி செல்வேந்திரன்,சமூகநீதி என்பது பற்றி பேராசிரியர் அப்துல்காதர், மொழிப் போர்  குறித்து பேராசிரியர் சபாபதி மோகன் ஆகியோர் பேசினர்.
     மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.அசன்முகமது வரவேற்றார்.
     திண்டுக்கல்  மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ.  முன்னிலை வகித்தார். இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், சுகவனம், ராஜேந்திரன், சம்பத், சந்திரசேகர், முகமதுஅலி ஜின்னா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் இ.பெ. செந்தில்குமார், கண்ணன், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் என சுமார் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai