Enable Javscript for better performance
புள்ளியியல் பயன்பாடு: மாநிலக் கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல், செப். 29: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில்  வணிகவியல் மற்றும் பொருளாதாரத் துறைகளின் சார்பில் புள்ளியலின் பயன்பாடு  குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
     இந்நிகழ்ச்சிக்கு, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கா. மணிமேகலை தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
     பல்கலைக்கழக , கல்லூரி  மாணவர்கள் தங்களது துறையில் மேற்கொள்ளும் ஆய்வுகள்,   அவர்களது கல்வித் திறனை உயர்த்தவும்,   வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் உதவுகிறது என்று பேசினார்.
      முன்னதாக,  வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வள்ளி தேவசேனா வரவேற்றார்,
     கருத்தரங்கில்  தெரசா மகளிர் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் கலா,காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் சிவபிரகாசம்,அருனை பொருளியல் கல்லூரி பேராசிரியர் சிவசுந்தரம் அனுசன், ஆகியோர் வணிகவியல்,மற்றும் பொருளாதார துறையில் ஆய்வில் புள்ளியியலின் பயன்பாடு குறித்த முக்கியத்துவத்தையும்,ஆய்வில் புள்ளியியலின் பங்களிப்பையும் குறித்து பேசினர்.
      இந்துமதி நன்றி கூறினார்.
     இக் கருத்தரங்கில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்,முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் உட்பட சுமார் 400-பேர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai