கொடைக்கானல் நகராட்சி புதிய கட்டடம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு

கொடைக்கானல் நகராட்சியின் புதிய கட்டடத்தை, தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
Published on
Updated on
1 min read

கொடைக்கானல் நகராட்சியின் புதிய கட்டடத்தை, தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

கொடைக்கானல் நகராட்சிக் கட்டடம் 120 ஆண்டு பழமை வாய்ந்தது. கடந்த 11.3.2013 இல் ரூ. 2 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த புதிய நகராட்சிக் கட்டடத்தை, வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் வேணுகோபாலு, நகராட்சி அலுவலகப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில், கொடைக்கானல் நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) எட்வர்ட், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணக்குமார், நகரமைப்பு அலுவலர் சுடலையாண்டி ரவி, அதிமுக நகரச் செயலர் ஜான்தாமஸ், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் முஸ்தபா, நிர்வாகி பரமசிவம், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் செல்வம், மாவட்ட மருத்துவ அணிச் செயலர் இளம்வழுதி, மாணவரணித் தலைவர் பரூக் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், அதிமுக மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com