திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைகேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சர்வ அமாவாசை விழா நடைபெற்றது.
இதையொட்டி, சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து புனித நீராடி, நெய்விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அருகிலுள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் விசேஷ வழிபாடு பூஜைகள் நடந்தன. மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. பின்னர், அறுசுவை உணவு அன்னதானம் நடைபெற்றது.