கொடைக்கானல் பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் பள்ளியில் 5ஆவது தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு, பவான்ஸ் பள்ளித் தலைவர் ராமசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஸ்ரீதேவி மோகன் வரவேற்றார். இதில், நேரு கல்வி குழுமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் குட்டி, ராஜூ, நாராயணசாமி, சீனிவாசன், சுவாமி அணுகுலானந்தா, மேனன் ஆகியோர் தேசப்பற்று, பண்பாடு, கலாசாரம், சமுதாயம் போன்ற தலைப்புகளில் பேசினர். முன்னதாக, தேசிய ஒருமைப்பாட்டு முகாமை, ராகேஷ் சாக்úஸனா, மீனா விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம் முகாமில், இந்தியாவில் உள்ள மொத்தம் 42 பாரதிய வித்யா பவான்ஸ் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முகாமானது, ஆறு நாள்கள் நடைபெற்றது.