பழனி செüராஷ்டிரா சபா ஹாலில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
பழனி திருவள்ளுவர் வாசகசாலை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சுப்ரமணியம் இறைவணக்கம் பாடினார். பொருளாளர் ஆச்சாலியன் வரவேற்புரையாற்றினார். செயலர் ராசாராம் விளக்கவுரையாற்றினார். தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் வீரசவுந்தர்யா, பாத்திமா நஸ்ரின், மாணவர்கள் கணபதிராஜா, ரெங்கநாதன், பரத்பாபு மற்றும் ராஜேஷ் குருமூர்த்தி ஆகியோருக்கு நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) ரெங்கநாதன், நல்லாசிரியர் திருமலைசாமி, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
மாணவி வீரசவுந்தர்யா மேற்படிப்புக்காக கோதைமங்கலம் அரசு ஒப்பந்ததாரர் கருப்புச்சாமி ரூ. 10 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். சங்கத் தலைவர் துளசிராமன் நன்றி கூறினார்.