இளம் வயது திருமணத்தில் ஈடுபடுவோர் மீது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அவர் தெரிவித்துள்ளது: குழந்தைத் திருமண தடைச் சட்டம் 2006இன்படி, 18 வயது நிரம்பாத பெண்ணுக்கும், 21 வயது நிரம்பாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.
குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்கு, திருமண மண்டப உரிமையாளர்கள், கோயில் நிர்வாக அதிகாரிகள், அச்சக உரிமையாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் முழுஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
மணமகள் மற்றும் மணமகனின் பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, திருமணத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும். குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.