தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் மாணவர்களுக்கான கவிதைப் போட்டி

மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை
Published on
Updated on
1 min read

மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

  இது குறித்து, மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. சந்திரா தெரிவித்துள்ளது:

  தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில், கல்லூரி மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதியும், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும், தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் இந்óதப் போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும், ஒரு பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  போட்டியில் பங்கேற்க வரும் மாணவர்கள், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் ஒப்பத்துடன் வரவேண்டும்.

  கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசாக தலா ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ. 7 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன.

  மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.

 மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தமிழ் மொழியில் உள்ள தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 0451-2461585 என்ற எண்ணில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com