சுடச்சுட

  

  கொடைக்கானல் வனப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் முகாமில் பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

  கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக சீசன் நிலவி வந்த வேளையில் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேவையில்லா பொருள்களை வனப்பகுதிகளில் விட்டுச் சென்றுள்ளனர். இதனால் வனப் பகுதி மாசுபடியாமல் இருக்க வனத்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்  வனப்பகுதிகளில் குப்பைகள் அகற்றும் முகாமில் ஈடுபட்டனர்.

  இம் முகாமை மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசியதாவது:கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பிளாஸ்டிக், பொருள்கள் மற்றும் மதுபானங்கள், புகை பிடித்தல் பொருள்கள் கொண்டு செல்வதற்கு கடந்த ஆண்டு அனுமதி மறுக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு வனப் பகுதிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களை சோதனையிட்டதில் கடந்தாண்டை விட குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மது பானங்கள், புகை பிடித்தல் பொருள்கள் இருந்தது வாகனச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. வருங்காலங்களில் இவைகள் படிப்படியாக குறைவதற்கு வாய்ப்புண்டு.

  மேலும் வனப் பகுதிகளில் மாதத்துக்கு இரண்டு முறை குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

  தற்போது சீசன் காலத்தில் அதிகமான குப்பைகள் இருந்து வருவதால் அவற்றை அகற்றும் பணி நடைபெறுகிறது என்றராம். முன்னதாக துப்புரவுப் பணி முகாமிற்கு வந்தவர்களை வனவர் சந்துரு வரவேற்றார்.

  இந் நிகழ்ச்சியில் ஆர்.சி.பள்ளி ஆசிரியை ஜூலி மற்றும் மாணவர்கள், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai