Enable Javscript for better performance
பழனி பங்​குனி உத்​தி​ரத் திரு​விழா முன்​னேற்​பாடு கூட்​டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி பங்​குனி உத்​தி​ரத் திரு​விழா முன்​னேற்​பாடு கூட்​டம்

    Published on : 27th March 2014 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருள்​மிகு தண்​டா​யு​த​பாணி சுவாமி திருக்​கோ​யில் பங்​குனி உத்​தி​ரத் திரு​வி​ழா​வுக்​கான முன்​னேற்​பா​டு​கள் குறித்த ஆலோ​ச​னைக் கூட்​டம் புதன்​கி​ழமை நடை​பெற்​றது.​

    பழ​னி​யில் பங்​குனி உத்​தி​ரத் திரு​விழா ஏப்​ரல் 7ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கொடி​யேற்​றத்​து​டன் தொடங்​கு​கி​றது.​

     இதை முன்​னிட்டு,​திரு​வி​ழா​வுக்​கான முன்​னேற்​பா​டு​கள் குறித்த ஆலோ​ச​னைக் கூட்​டத்​தில்,​மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ளர் த.ஜெய​சந்​தி​ரன் முன்​னிலை வகித்​தார்.ஆட்​சி​யர் ந.வெங்​க​டா​ச​லம் தலைமை வகித்து,​பேசி​யது:​

    பங்​குனி உத்​தி​ரத் திரு​வி​ழாவை முன்​னிட்டு,​பல பகு​தி​களி​லி​ருந்​தும் பாத​யாத்​திரை வரு​வோ​ரின் வச​திக்​காக,​திண்​டுக்​கல் சாலை​யில் 23 இடங்​கள்,​மதுரை சாலை​யில் 5 இடங்​கள்,​ஒட்​டன்​சத்​தி​ரம் சாலை​யில் 9 இடங்​கள்,​தாரா​பு​ரம் சாலை​யில் 5 இடங்​கள்,​உடு​ம​லைப்​பேட்டை சாலை​யில் 5 இடங்​கள்,​பழைய தாரா​பு​ரம் சாலை​யில் 3 இடங்​கள் என மொத்​தம் 50 இடங்​க​ளில் தாற்​கா​லிக நிழற்​பந்​தல் அமைக்​கப்​பட உள்​ளன.​

    சேலம்,​ஈரோடு,​திருப்​பூர்,​மதுரை,​திருச்சி,​தேனி உள்​ளிட்ட பகு​தி​களி​லி​ருந்து வரும் பக்​தர்​க​ளின் வச​திக்​காக 350 சிறப்பு பஸ்​கள் இயக்​கப்​பட உள்​ளன.2 ஆயி​ரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட உள்​ள​னர்.முக்​கிய இடங்​க​ளில் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு,​கண்​கா​ணிக்கப்​ப​டும்.​திரு​வி​ழா​வுக்​காக வரும் பாத​யாத்​திரை பக்​தர்​கள் யானைப் பாதை வழி​யாக மலைக் கோயி​லுக்​குச் செல்​ல​வும்,​தரி​ச​னம் முடிந்த பின் படிப்​பாதை வழி​யாக இறங்​கும் வகை​யி​லும் ஒரு வழிப்​பா​தை​யாக மாற்​றப்​ப​டும்.​

    20 மருத்​து​வர்​க​ளைக் கொண்டு நக​ரும் மருத்​து​வக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.கூடு​தல் அவ​சர ஊர்​தி​யும்,​தீய​ணைப்பு வாக​ன​மும் தயார் நிலை​யில் வைத்​தி​ருக்க உத்​த​ர​வி​டப்​பட்​டுள்​ளது என்​றார்.​

    இக் கூட்​டத்​தில்,​திருக்​கோ​யில் இணை ஆணை​யர் ராஜ​மா​ணிக்​கம்,​பழனி கோட்​டாட்​சி​யர் அ.சுந்​தர்​ராஜ்,​செயற்​பொ​றி​யா​ளர் பிர​காஷ்,​வட்​டாட்​சி​யர் வர​த​ரா​ஜன்,​உதவி ஆணை​யர் மேனகா,​நக​ராட்சி ஆணை​யர் ​(பொறுப்பு)ஆர்.செந்​தில் உள்​ளிட்ட பலர் பங்கேற்ற​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai