Enable Javscript for better performance
அதிவேக லாரிகள் சிறைப்பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அதிவேகமாக சென்ற மணல் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

    பழனியை அடுத்த பெரியம்மாபட்டி, கரிக்காரன்புதூர், பெருமாள்புதூர் போன்ற கிராமங்கள் மண்வளம் நிறைந்த பகுதிகளாகும். இதனால் இங்கு நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், செங்கல் சேம்பர்கள் உள்ளன. இந்நிலையில் இங்கிருந்து பட்டா நிலங்களில் வண்டல்மண் விலைக்கு வாங்கப்பட்டு வெளியூரில் உள்ள செங்கல் சூளைகளுக்கும், கேரளத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பெரியம்மாபட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் வழியாக நெய்க்காரபட்டி பிரதான சாலைக்கு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. மேலும், லாரிகள் அதிவேகமாக செல்வதால், சாலை நெடுக மணல் சிதறி செல்வதாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் விவசாயிகள் என பலரும் இதனால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதனால் புதன்கிழமை அதிகாலையில் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சின்னக்காந்திபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். லாரிகளை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து மறித்து நின்றதால் 20க்கும் மேற்பட்ட லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. ஆனால் சம்பவ இடத்துக்கு நீண்ட நேரமாகியும் போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ வரவில்லை. இதனால் பொதுமக்களும், லாரி ஓட்டுநர்களும் பேசி சமாதானம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட லாரிகள் கிளம்பி சென்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai