Enable Javscript for better performance
கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பழனி தாலுகா அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் மைக்கேல் வரவேற்றார். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டச் செயலாளர் சந்திரசேகரன், வட்டப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு கிராம ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தலில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்கள் அனைவரும் இரவு, பகல் பாராமல் வாக்குச்சாவடிக்கான ஏற்பாடுகள் செய்தல், மின்னணு பெட்டிகளை கொண்டு போய் சேர்த்தல், வாக்காளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தேர்தல் பணிக்காக ரூ.600 வீதம் சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கூடுதலான பணிகள் செய்தும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே தேர்தல் ஆணையம் முறையான ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று குரல் எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai