Enable Javscript for better performance
திண்டுக்கல் பகுதியில் லேசான மழை: இடி தாக்கி கட்டடம் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் பகுதியில் லேசான மழை: இடி தாக்கி கட்டடம் சேதம்

    By திண்டுக்கல்,  |   Published on : 01st May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் லேசான தூறலுடன் சாரல் மழை பெய்தது. இதில், இடி தாக்கியதில் தனியார் பேருந்து அலுவலகக் கட்டடம் சேதமடைந்தது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவியது. காலை 8 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். வெயில் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச் சாறு மற்றும் குளிர்பானங்களின் விற்பனையும், விலையும் அதிகரிக்கத் தொடங்கின.

    இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் முதல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர் காற்று வீசியது. பின்னர், ஒரு சில இடங்களில் லேசான தூறல் மழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்யத் தொடங்கியது. சிறுமலை வனப்பகுதி, கொடைரோடு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனபலத்த மழையும், செம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.

    திண்டுக்கல் நகரில் சில நிமிடங்கள் மட்டுமே லேசான மழை பெய்தது. ஆனாலும், வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாலை 6 மணிக்கு மேல், திண்டுக்கல் நகரில் மீண்டும் தூறல் மழை விழுந்துபோது, பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது, ஆர்த்தி தியேட்டர் சாலையில் உள்ள தனியார் சுற்றுலா பேருந்துஅலுவலகத்தின் அருகே இடி விழுந்தது கண்டறியப்பட்டது.

    இதில், அலுவலகத்துக்குச் செல்லும் மின்இணைப்பில் தீப்பற்றி, அலுவலகக் கட்டடத்துக்கும் பரவியது. அருகில் நின்றிருந்த ஓட்டுநர்களின் உதவியால், அந்த தீ மேலும் பரவாமல் அணைக்கப்பட்டது. இதனால், அந்தக் கட்டடம் லேசாக சேதமடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai