Enable Javscript for better performance
நத்தத்தில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் கனமழை பெய்தது. நத்தத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்த கனமழையால், சுற்று வட்டாரப் பகுதிகளில் வெப்பம் தணிந்து, குளுமை நிலவியது. மேலும், செந்துறை, சமுத்திரப்பட்டி, பரளி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட காலத்துக்குப் பிறகு மழை பெய்துள்ளதால், பட்டுப்போயிருந்த தென்னை, மா உள்ளிட்ட மரங்கள் தளிர்க்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai