Enable Javscript for better performance
பழனி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி, லாரி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி, லாரி பறிமுதல்

    By பழனி,  |   Published on : 01st May 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே மண் மற்றும் மணல் கடத்தி வந்த மாட்டு வண்டிகள், லாரி ஆகியவற்றை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பழனியைச் சுற்றியுள்ள ஆற்றுப் படுகைகளிலும், வாய்க்கால்களிலும் மணல், மண் கடத்தப்பட்டு வருவதாக, வருவாய்த் துறையினருக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் வருவாய்த் துறை அலுவலர்கள் தீவிர சோதனைப் பணியில் ஈடுபட்டனர்.

    பாப்பம்பட்டி அருகே வருவாய் அலுவலர் உஷா, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, காவலப்பட்டி பகுதியில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி பிடிக்கப்பட்டது. அதேபோல், வண்டிவாய்க்கால் பகுதியில் வருவாய் அலுவலர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி ஆகியோர் மேற்கொண்ட சோதனையில், 5 மாட்டு வண்டிகளில் நெய்க்காரபட்டி பகுதியில் இருந்து அனுமதி ஏதுமின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மணல் கடத்திய இந்த வாகனங்களை, பழனி தாலுகா போலீஸார் உதவியுடன் வருவாய்த் துறையினர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்குக் கொண்டு சென்றனர். பழனி கோட்டாட்சியர் உத்தரவின்பேரில், மாட்டு வண்டிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரமும், லாரிக்கு ரூ. 25 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai