Enable Javscript for better performance
மே 5இல் கடைகள் அடைப்பு: வணிகர்கள் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

     பழனி ஒக்கலிக்கர் காப்பு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்துக்கு கெளரவத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கெளரவ ஆலோசகர் ரத்தினம், நிர்வாக ஆலோசகர் ஹாஜி முகமது அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் தண்டபாணி வரவேற்றார். செயலாளர் முகமது எகையா, பொருளாளர் பாஸ்கரன், செய்தித் தொடர்பாளர் ஹக்கீம்ராஜா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் பல்வேறு வணிக கடைகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மே மாதம் 5ம் தேதி கோவை, அவினாசி சாலையில் கொடீசியா அரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெறவுள்ள 31வது வணிகர் தின மாநாட்டிற்கு பழனியில் உள்ள வணிகர்கள் கடைகளை அடைத்து விட்டு 50க்கும் மேற்கொண்ட வாகனங்களில் சென்று பங்கேற்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai