Enable Javscript for better performance
கல்விக் கடன் வழங்க முன்னுரிமை:வங்கிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கடன் வழங்க முன்னுரிமை:வங்கிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை

    By திண்டுக்கல்  |   Published on : 02nd May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என, வங்கிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

    மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் கே. மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:

    2013-14 நிதியாண்டில் கடன் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 110 விழுக்காடு இலக்கு அடையப்பட்டுள்ளது. மேலும், அரசு திட்டத்தின் கீழ் வங்கிகள் அளிக்க வேண்டிய கடன் இலக்கினை அடையவும் பரிந்துரை செய்யப்பட்டது.

    மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைக் கடன் மற்றும் மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்குவதற்கு வங்கிகள் முன்னுரிமை வழங்க வேண்டும். நிதி ஒருங்கிணைப்புத் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில், வங்கி தொடர்பாளர்களை நியமிக்கவேண்டும் என்றும், வங்கியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி, தாண்டிக்குடி, ராஜாக்காப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வங்கி கிளைகளை ஏற்படுத்த வேண்டும். 2005ஆம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், நாணயம் வழங்கவும் ஜூன் மாதத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். இந்த முகாம்கள், திண்டுக்கல், வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு, பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.மேலும், அரசு திட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதற்கு வங்கியாளர்களுடன், அரசு அலுவலர்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கூட்டத்தில், முன்னோடி வங்கி மேலாளர் ஜான்நெல்சன், கனரா வங்கி துணை பொதுமேலாளர் சேகரன், நபார்டு வங்கி உதவிப் பொது மேலாளர் பாலு, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் பாலு, ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மைய தலைவர் அர்ஜூன் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai