Enable Javscript for better performance
கொடைக்கானலில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

    By கொடைக்கானல்  |   Published on : 02nd May 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சீசன் களை கட்டத் தொடங்கியுள்ளது.

    மே தினத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பில்லர் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், அமைதிப் பள்ளத்தாக்கு, குணா குகை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் தென்பட்டனர்.

    கடந்த 2 நாள்களாக அவ்வப்போது சிறிது சாரல் அடிப்பதால், குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    பெரும்பாலும், வாகனங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவற்றை நிறுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். சுற்றுலா இடங்களிலிருந்து வாகனங்களை கிளப்புவதற்கு 4 மணி நேரத்துக்கும் மேலாகிறது.

    ஏரிச் சாலை பகுதி, பூங்கா சாலை ஆகிய இடங்களை, சுற்றுலாப் பயணிகள் திறந்தவெளிக் கழிப்பறையாகப் பயன்படுத்தி வருவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுற்றுப்புறச் சூழல் பாழ்படுகிறது. இப் பகுதிகளில் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, சாலைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே தினமான வியாழக்கிழமை மட்டும், ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் வசூலாகியுள்ளது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பூங்காவிலுள்ள வண்ண வண்ண மலர்களைப் பார்த்து ரசித்து சென்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai