Enable Javscript for better performance
கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய 16 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய 16 லாரிகள் பறிமுதல்

    By கொடைக்கானல்  |   Published on : 02nd May 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடிய 16 லாரிகளை அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரியானது, பல்வேறு காரணங்களால் மாசுபட்டு வருகிறது. எனவே, ஏரியைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கடந்த 28ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது. இச் செய்தியின் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம், கொடைக்கானல் ஏரியில் தண்ணீர் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், புதன்கிழமை இரவு ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த 16 லாரிகளை, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராமசாமி தலைமையில், டி.எஸ்.பி. பால்ராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன் மற்றும் அதிகாரிகள் பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த லாரிகளை நகராட்சிக்குச் சொந்தமான கலையரங்கம் பகுதியில் நிறுத்தி வைத்தனர்.

    இது குறித்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், ஏரியில் தண்ணீரைத் திருடிய 16 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வியாழக்கிழமை விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கொடைக்கானலில் உள்ள விடுதிகள் மூடும் அபாயம்: கொடைக்கானலில் பருவமழை பொய்த்ததாலும், நீரோடைப் பகுதிகளில் நீர் வரத்து இல்லாததாலும், நகர்ப் பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், உணவகங்களிலும், விடுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான தங்கும் விடுதிகள் தண்ணீர் இல்லாமல் பூட்டப்பட்டு வருகின்றன.

    ஆண்டுதோறும் மே மாதங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால், முன்கூட்டியே அறைகள் பதிவு செய்யப்பட்டுவிடும். ஆனால், தண்ணீர் இல்லாத காரணத்தால், பதிவு செய்யப்பட்ட அறைகளை ரத்து செய்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளிடம் வாங்கிய தொகையையும் திருப்பிக் கொடுத்துள்ளோம் என, கொடைக்கானல் ஹோட்டல் மேலாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai