Enable Javscript for better performance
தெரு நாய்களுக்கு கருத்தடை- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கோயில் நகரான பழனியில் சாலைகளிலும், தெருக்களிலும் தெருநாய்கள், மாடுகள், பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கழுதைகளும் தெருக்களில் சுற்றித் திரிந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றன. கடந்த சிலமாதங்களுக்கு முன் தெருநாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் கருத்தடை செய்யப்பட்டது. கருத்தடை செய்யப்பட்ட ஏராளமான நாய்கள் தற்போது குட்டிகள் போட்டு, அவை பெரிதாகி மேலும் பல குட்டிகள் போட்டுள்ளன. தற்போது பழனி நகரில் சுமார் 495 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மீண்டும் நாய்களுக்கு கருத்தடை செய்ய பணியை மேற்கொண்டுள்ளது. பழனி பேருந்து நிலையம், மார்க்கெட், அடிவாரம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்கள் தேனியை சேர்ந்த அவார்டு டிரஸ்ட் மூலம் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட பகுதிகளிலேயே விடப்படும் என நகர்நல அலுவலர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai