Enable Javscript for better performance
நத்தத்தில் கேரட் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் உள்ள தினச் சந்தைக்கு, மலைப் பகுதிகளான கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் கேரட் சீசனாகும். பிப்ரவரி முதல் வாரத்தில் கிலோ ரூ. 25-க்கு விற்பனை செய்யப்பட்ட கேரட், பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வரத்து குறைவால் கிலோவுக்கு ரூ. 5 வரை அதிகரித்து ரூ. 30-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில், வெயில் காலம் துவங்கி கேரட் விளைச்சல் குறைந்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து ரூ. 5 வரை உயர்ந்தே இருக்கிறது.

    இது குறித்து, வியாபாரி முத்துமாணிக்கம் கூறியது: டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய குளிர்கால மாதங்கள் மட்டுமே கேரட் சீசனாகும். இம்மாதங்களில் கேரட் விளைச்சல் அதிகமாக இருக்கும். சீசன் முடிவடைந்ததில் இருந்து கேரட் விலை அதிகரித்து வருகிறது. தற்போது, ஒரு கிலோ கேரட் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கேரட் வாங்குவதை தவிர்க்கின்றனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai