நத்தத்தில் மே தின கொடியேற்று விழா
By நத்தம் | Published on : 02nd May 2014 12:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.
இதற்கு, தாலுகா குழு உறுப்பினர் தவநாதன் தலைமை வகித்தார். தையல் தொழிலாளர் சங்க வட்டார அமைப்பாளர் ஜாபர் கொடியேற்றினார். தாலுகா குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, தாலுகா செயலர் ஸ்டாலின், மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மே தினம் மற்றும் தொழிலாளர் தின சிறப்புகள் குறித்துப் பேசினர். பொன்னுச்சாமி நன்றி கூறினார்.