Enable Javscript for better performance
பழனி அருகே மது விற்றவர்கள் மீது வழக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே சில்லறையில் மது பாட்டில் விற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு விதிகளுக்கு முரணாக சாமிநாதபுரம்- வன்னியவலசு சாலையில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் (49), வயலூர்-நல்லூர் சாலையில் ரயில்வேகேட் அருகே மடத்துக்குளம் பெரியவட்டாரம் கன்னியப்பன் மகன் விஜய் (28) ஆகியோர் சில்லறையில் மதுபாட்டில்களை விற்றார்

    களாம்.

    இதைத் தொடர்ந்து சாமிநாதபுரம் போலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai