Enable Javscript for better performance
பழனி, திண்டுக்கல்லில் மே தின கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மே தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.

    மே தினத்தை முன்னிட்டு, பழனி-புதுதாராபுரம் சாலையில் அண்ணா தொழிற்சங்கம், அண்ணா கலாஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கொடியேற்றப்பட்டது. பழனி தொகுதி எம்.எல்.ஏ. வேணுகோபாலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க லோகநாதன், மாவட்டத் தலைவர் சுப்ரமணி, அண்ணா கலாஸ் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் மாசாணத்துரை, மாவட்ட விவசாய அணி செயலர் கோதை நடராஜன், தாராபுரம் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    சிஐடியூ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மே தின பேரணி, பழனி அடிவாரம் தேவர் சிலையில் இருந்து புறப்பட்டு, அடிவாரம் பாதவினாயகர் கோயிலில் நிறைவு பெற்றது. முன்னாள் நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலர் குருசாமி, சிஐடியூ கன்வீனர் பிச்சமுத்து, மனோகரன், கவுன்சிலர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

    பழனி-திண்டுக்கல் சாலையில் ஒரு திருமண மண்டபத்தில் துவங்கிய இப்பேரணியில், சங்கத் தலைவர் நிஜாம்முகமது தலைமையில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல் நகரில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு சார்பில், சர்வதேச தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, ஐஎன்டியுசி போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சிதம்பரம், முன்னாள் கவுன்சிலர் ஜோதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் பேசியது:

    அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை விளக்கிப் போராட்டம் வெடித்தது. 8 மணி நேர வேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்டவை இதில் அடக்கம்.

    இருப்பினும், இப்போராட்டத்தில் 4 தொழிற்சங்கத்தினர் தூக்கிலிடப்பட்டனர். இப்போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்பட்ட மே முதலாம் தேதியே உலக தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிவித்தார். நகர சிறுபான்மைப் பிரிவு செயலர் பஷீர் அகமது நன்றி கூறினார்.

    திண்டுக்கல்லின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்கள் மே தின விழாவைக் கொண்டாடினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai